இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
30
ஜாதகத்தில் கேந்திரங்களின் வலிமை யைக்கொண்டே ஒரு ஜாதகரின் இவ்வுலக வாழ்க்கையின் வளமையைக் கணக்கிட முடியும். அதில் முக்கியமானது தசம கேந்திரமேயாகும். ஒரு பாவத்தின் பத்தாம் பாவத்தில் அமையும் கிரகம் அந்த பாவத்தை செயல்படுத்தும். ஒரு கிரகத்தின் பத்தாம் பாவமே அந்த கிரகத்தின் ஆளுமையைக் காட்டும். இந்த ஆய்வில் கேந்திராதிபதி தோஷத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். இதுவே "கந்தர்வ நாடி'யில் கூறப் படும் சூட்சுமமான கருத்து.
""மழபாடியின் மாணிக்கமே! புண்ணிய, பாவப் பலன்களால் மக்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற் குமே செல்ல வேண்டியுள்ளது. மீண்டும் பிறவா வரம்பெற்று, மோட்சத்தை அடையமுடிவதில்லை. எளியோரும் ஜீவன் முக்தி பெறும் வழியைத் தாங்கள் உபதேசிக்க வேண்டும்'' என அன்னை சுந்தராம்பிகை, திருமழபாடியில் அருள்பாலிக்கும் வைத்திய நாதரிடம் விண்ணப்பித்தாள்.
அதற்கு முக்கண்ணன் உரைத்தது- ""தன் கடமைகளை சரிவரச் செய்வதாலும், நல்ல புதல் வர்களைப் பெறுவதாலும், தான் சம்பாதித்த செல்வத்தைக்கொண்டு தான, தர்மம் செய்வதா லும் சுகம்தரும் சொர்க்கத்தை அடைவார் களேயன்றி, இன்பம்தரும் மோட்சத்தை அடைய மாட்டார்கள். நல்வினை- தீவினைகளைச் செய்யும் மனிதர்கள், நாதம் எழுப்பும் மணியின் நாவினைப்போல் ஊசலாடி, சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமே செல்வார்கள். கரையேறாத படகுகள்போல, வாழ்க்கை நீரோட்டத்தில் அலைக்கழிக்கப்படுவார்கள். தன்னலமற்ற தியாகம் செய்பவர் மட்டுமே "சாலோக்யம்' எனும் மோட்சப்பதியை அடைந்து, பேரின்பத்தைப் பெறுவார்கள். "அவித்த நெல் முளைப்பதில்லை'. இறவா நிலையும், மீண்டும் பிறவா நிலையும் பெற்றவர்களே ஜீவன் முக்தர்கள்.''
""காட்சியும், காட்சியைக் காணும் சாட்சியுமாய் விளங்கும் பரம்பொருளே! "கடீஸமம்' எனும் தாண்டவத் தின் லயமாகிய மிருகசீரிட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், திருவாதிரை முதல் பாதத்தில் குருவும், ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் முதல் பாதத்தில் சுக்கிரனும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் புதனும், ஸ்வாதி மூன்றாம் பாதத்தில் செவ்வா யும், கேட்டை மூன்றாம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சனியும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் தயைகூர்ந்து விளக்கவேண்டும்'' என்று காளையார்கோவில் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்வர்ணகாளீஸ்வரரிடம் அன்னை ஸ்வர்ணவல்லி வினவினாள்.
கிருதபுரீஸ்வரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில், வசுதேவபுரத்தில் ஒரு நிலச்சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தான். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன் பூர்வீக சொத்தில் விவசாயம் செய்யும் பொறுப்பை ஏற்றான். தன் வயலில் வேலைசெய்த பணியாளர்களுக்கு சரியான ஊதியம் தராமல் துன்புறுத்தி னான். பலரும் வறுமையால் மடிந்தனர்.
தன்னிடம் ஊதிய உயர்வு கேட்டவர் களை நையப்புடைத்தான். ஒருநாள் வயிற்றில் நோய் கண்டு இறந்தான். எம தூதர்களின் பாசக்கயிற்றில் கட்டுண்டு, கல்மழை பொழியும் குரூரபுரம் எனும் பட்டணத்தின் வழியே "வைதரணி' நரகத்தை அடைந்தான். சில காலம் கழித்து, கூர்ஜர தேசத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதில் கழுத்தில் கழலைநோய் வந்து அவதியுறு கிறான். தனக்காக பாரம் சுமந்தவர் களுக்கு உரிய ஊதியம் தராதவனும், பிறர் உழைப்பில் உல்லாசமாக இருப் பவனும் தன் உடலில் கழலையினை சுமந்து துன்புறுவான். இதற்குப் பரிகாரமாக குளத்திலுள்ள மீன் களுக்கு உணவும், ஏழைகளுக்கு வஸ்திர தானமும் செய்தால் நோய் நீங்கி சுகம் பெறுவான்.''
செல்: 63819 58636